PAKEE Creation
   
  K.Pakeerathan
  Tamil PonMozikal
 
 பிச்சையெடுக்கும் பணக்காரர்கள்

சூரியனை மறைக்க முடியுமா?

சூரியனை விட மேகங்கள் சக்தி வாய்ந்தவையும் அல்ல; நீடித்தவையுமல்ல. மேகங்கள் எவ்வளவு பெரியவையாய் இருந்தாலும், அவற்றால் சூரியனை அடியோடு மறைத்து விட முடியாது. இதைப் போன்றுதான் ஒரு நல்ல மனிதனைத் தலைதூக்க விடாமல் செய்ய்யும் கயவர் கூட்டத்தின் முயற்சியும். 

-தாகூர்.

பயனில்லாத நம்பிக்கை

நமக்கு ஏராளமான சந்தேகம் தோன்றுகிறது. அதற்காக நாம் மனச்சோர்வடைய வேண்டியதில்லை. சுத்தமான கேள்விகள் நம்பிக்கையை வலிவும் வன்மையும் உடையவனாய் வைத்திருக்கும். ஐயப்பாட்டுடன் தொடங்கினாலன்றி ஆழ்ந்த நம்பிக்கை கொள்வதென்பது சாத்தியமில்லை. சிந்திக்காமல் மேலெழுந்தவாரியான நம்பிக்கை கொள்பவனின் நம்பிக்கையால் பயனில்லை. அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு இருப்பவன் ரத்தமும், தண்ணீரும் சிந்தி அந்நம்பிக்கையைப் பெற்றிருக்கிறான். முள்ளும் புதரும் நிறைந்த காட்டைக் கடந்து நல்ல பாதையை அடைபவனைப் போல் சந்தேகத்திலிருந்து உண்மையை அறிய முயன்றவன். 

-ஹெலன் கெல்லர்.

பிச்சையெடுக்கும் பணக்காரர்கள்

சிலரிடம் நிறைய இருந்தும், இன்னும் வேண்டும் என்று ஏங்குகிறார்கள். என்னிடம் மிகக் கொஞ்சமே இருந்த போதிலும் இன்னும் வேண்டும் என்ற ஏக்கம் என்னிடம் இல்லை. நிறைய இருந்தும் பிச்சையெடுக்கிறார்கள். என்னிடம் மிகக் கொஞ்சமே இருந்த போதிலும் மற்றவர்களுக்கு நான் கொடுக்கும் நிலையில் இருக்கிறேன். அவர்களிடம் ஒன்றும் இல்லை. என்னிடம் அனைத்தும் இருக்கிறது. அவர்கள் வாழ்வதில்லை. நான் வாழ்ந்து வருகிறேன்.

 -சர்.எட்வர்ட் டையர்.

நிரந்தரமில்லாத வாழ்க்கை

மனித வாழ்க்கை என்பது குறுகிய காலமே இருக்கக் கூடியது. அக்காலத்தில் தர்மத்தைப் போற்றி வாழ மனிதன் கற்றுக் கொள்ள வேண்டும். செல்வத்தைச் சேகரிப்பதிலோ இன்பத்தை நாடி அலைவதிலோ பொழுதை வீணாக்கி விடக் கூடாது. இவை எல்லாம் நிரந்தரமானவை அல்ல. நொடிப்பொழுதில் மாறிவிடக் கூடியவை.

 -ஸ்ரீ ரஹோத்தமச்சார்.

கட்டுப்பாடுகள் எதற்காக?

கட்டுப்பாடுகள் நமது மதத்தில் நமக்கு நன்மை கிடைப்பதற்காகத்தான் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. அவற்றை மதித்து நடப்பதுதான் தர்மம். அதுதான் கடசியில் நன்மையைக் கொடுக்கும். அதை மீறி நடப்பதால் தற்காலிகமான லாபங்கள் கிடைக்கலாம். ஆனால் அவை நிலைக்கக் கூடியவை அல்ல.

 -பகவத் கீதை.

மனத்தைச் சுத்தமாக வை

பயனில்லாமல் எதேச்சையாக மனம் செல்வதைத் தடுத்துக் கொள்ள வேண்டும். திடீரென்று ஒருவர், "நீ இப்போது என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்" என்று கேட்டால், உடனே தயங்காமல் உள்ளதை உள்ளபடியே "இதை நினைத்தேன், இது என் மனத்தில் உள்ள எண்ணம்" என்று எளிதில் செல்லக்கூடியவாறு மனத்தைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

- மார்க்கஸ் அவுரேலியஸ்.

அச்சம் உருவாக்கும் எண்ணங்கள்

உலகம் வீரர்களுடையது. சத்தியமான வார்த்தை. வீரனாக இரு. எப்போதும், "அச்சமில்லை!"என்று சொல்லிக் கொள். பிறருக்கும் இதைச் சொல். "அஞ்சாதீர்கள்! அச்சம் மரணம், அச்சம் பாவம், அச்சம் நரகம், அச்சம் அதர்மம், அச்சம் தீயொழுக்கம், உலகத்திலுள்ள தவறான எண்ணங்கள் எல்லாம் பயத்திலிருந்துதான் பிறந்திருக்கின்றன.

 -விவேகானந்தர்.

தெய்வத்தின் கருவியாக

தெய்வமே! என்னைத் தங்கள் கருவி ஆக்கிக் கொள்ளுங்கள். பிறர் என்னைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நான் பிறரைச் சமாதானப்படுத்துவேனாக. பிறர் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்காமல், நான் பிறரைப் புரிந்து கொள்ள முயல்வேனாக. பிறர் என்னை நேசிக்கட்டும் என்று காத்திராமல், நான் அவர்களை நேசிப்ப்பேனாக. 

-புனித பிரான்ஸிஸ்.

தொகுப்பு: தாமரைச்செல்வி

 

வருங்காலத்தில் பெரிய மனிதனாக...

ஏற்ற குறிக்கோள் எது?

ஒவ்வொருவனும் தான் பெரிய கல்விமானாகவும், பெரும் புகழ் பெற்ற சீமானாகவும் விளங்க வேண்டுமென்று விரும்புவது இயற்கை. ஆனால், அவ்விதம் விரும்புகிறானே தவிர, அதற்கு வேண்டிய வழிகளைத் தேடப் பாடுபடுவதே கிடையாது. அவ்வாறு விரும்புகின்றவன் வாழ்க்கையில் ஒப்பாரும் மிக்காரும் இன்றி விளங்க, எவரும் அறியத்தக்கனவும், மேற்கொள்ளத்தக்கனவுமாகிய கொள்கைகள் சில உள்ளன என்பதையும் உணர வேண்டும். தன் அறிவு, ஆற்றல்களுக்கும் ஏற்ற ஒரு குறிக்கோளை ஒவ்வொருவனும் ஆராய்ந்து எடுத்தல் வேண்டும்.

-ராக்பெல்லர்.

செயலாகும் எண்ணங்கள்

ஒரு செயலை உன்னால் செய்ய முடியுமென்று நீ திட்டமாய் எண்ணுவாயானால் அது எவ்வளவு துன்பம் நிரம்பியதாயிருப்பினும் அதை நீ செய்தே முடிப்பாய். ஆனால் அதற்கு மாறாக இவ்வுலகத்தில் மிக எளியதாயிருக்கக் கூடிய செயலையும் உன்னால் செய்ய முடியாது என்று எண்ணுவாயின் அதை உன்னால் ஒருக்காலும் செய்ய முடியாது. சிறு குப்பை மேடுகள் கூட உனக்குக் கடக்க முடியாத பெரும் மலைகளாகத் தோற்றாமளிக்கும்.

-எமலிகோ.

இல்லாத சக்தி

கடற்கரையில் உடைந்து கிடக்கும் மரக்கலங்கள் போன்று காலமென்னும் அலைகளால் சிதறடிக்கப்பட்ட மனிதர்களை நாம் பார்க்கிறோம். அவர்கள் சிறந்த திறமைசாலிகளாகத்தாம் இருந்தார்கள். ஆயினும் துணிவும், தன்னம்பிக்கையும் ஒரு முடிவுக்கு வரும் சக்தியும் இல்லாததனால் அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.

-பாஸ்டர்.

திடமான நம்பிக்கை

வருங்காலத்தில் பெரிய மனிதனாகக் கூடிய இன்றையச் சிறியவன், தன் மனதில் இப்பொழுதிலிருந்தே ஆயிரக்கணக்கான் இன்னல்கள் ஏற்படினும் அவ்ற்றை எதிர்த்து நிற்பதோடு மட்டுமில்லாது ஆயிரக்கணக்கான தோல்விகள் ஏற்படினும் வென்றே தீருவது என்ற திடமான நம்பிக்கை கொள்ள வேண்டும்.

-தியோடர் ரூஸ்வெல்ட்.

தைரியத்தைக் கைவிடாதே

ஒரு போதும் எடுத்த காரியத்தைக் கைவிடாதே! எத்தனையோ சந்தர்ப்பங்களும் மாறுதல்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அவை தன்னம்பிக்கை கொண்டவர்களுக்கு நிச்சயம் உதவி செய்யும். பெரிய நெருக்கடிகளுக்கிடையேதான் இறைவன் வெற்றி பெறுவதற்கான வழியையும் வகுக்கின்றான். ஆனால் நீங்கள் மட்டும் மனம் தளராதீர்கள்! ஒரு போதும் தைரியத்தைக் கைவிடாதீர்கள்! ஏனெனில் துன்பமும் இன்பமும் சேர்ந்து வருவதே உலக இயல்பு என்பதை உணர்ந்து எவன், தைரியத்தை இழக்காதிருக்கிறானோ அவனே பெரும் அறிவாளியாவான். எல்லா முதுமொழிகளிலும் மிகவும் முக்கியமானது எதுவென்றால் ஒரு போதும் தைரியத்தைக் கைவிடாதே எனும் எச்சரிக்கைதான்.

-கவிஞர் ஹோம்ஸ்.

 தொகுப்பு: தாமரைச்செல்வி.

எங்கே இருக்கிறது மகிழ்ச்சி?

மகிழ்ச்சியை வளருங்கள்

நன்கு மனம் விட்டுப் பலமாகச் சிரியுங்கள். உலகம் உங்களுடைய சிரிப்பில் பங்கு எடுத்துக் கொள்ளும். நீங்கள் அழுது பாருங்கள், உங்களுடைய அழுகையில் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள். நீங்கள் ஒருவர்தான் அழுது கொண்டிருப்பீர்கள். உங்களுடைய அறிவின்மையும், வருத்தமும் இந்த உலகத்திற்குத் தேவையில்லாதவைகள். உங்களுடைய வருத்தத்தின் பளுவைச் சுமக்காமலேயே மற்றவர்கள் தாங்க முடியாத வருத்தத்தில் ஆழ்ந்து போயிருக்கிறார்கள். ஆகையால் மகிழ்ச்சியைப் பற்றிப் பேசி அதை மற்றவர்களிடம் பரப்ப முயற்சி செய்யுங்கள். உலக மக்களின் சந்தோசத்தை வளர்ச்சியில் ஈடுபடுங்கள்.

-வில்காய்

மகிழ்ச்சியைக் கொடுங்கள்

மகிழ்ச்சியை பற்றி நினையுங்கள். மகிழ்ச்சியாக இருப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். மகிழ்ச்சியை நம்புங்கள். பழக்கத்தின் மூலம் மகிழ்ச்சியை நிலை நிறுத்துங்கள். அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொடுங்கள்.

-நார்மன் வின்சென்ட் பீல்

மகிழ்ச்சியை அடைய

மகிழ்ச்சியை நாடிச் செல்வதில் பாதி மக்கள் தவறான பாதையில் செல்கின்றனர். எதையும் தன் சொந்தமாக்கிக் கொள்வது, பிறர் உழைப்பை அடைவது இவைதான் மகிழ்ச்சி என்று கருதுகின்றனர். மகிழ்ச்சி என்பது பிறருக்குத் தருவதில், பிறருக்காக உழைப்பதில்தான் இருக்கிறது. பெறுவதை விட தருவதுதான் மகிழ்ச்சி அடைவதற்குள்ள ஒரே வழி. அது ஒன்றேதான் அகலமான சீரான வெற்றிப்பாதை. 

-ஹென்றி டிரம்மண்ட்

மகிழ்ச்சியை அனுபவிக்க

பெரிய பணக்காரனாக வரவேண்டும் என்று ஆசைப்படுவதில் தவறு கிடையாது. வாழ்க்கையை நன்கு அனுபவித்து வாழவேண்டும் என்று ஆசைப்படுவதிலும் சிறிது கூட தவறு கிடையாது. ஆனால் ஒருவன் சேர்க்கும் செல்வம், அனுபவிக்கும் மகிழ்ச்சி மற்ற யாருக்கும் சிறிது கூட துன்பம் தராமலிருக்கும்படி  பார்த்துக் கொள்ள வேண்டும்.

-ஆண்ட்ரூ கார்னீஜி

 தொகுப்பு: தாமரைச்செல்வி.

வாழ்க்கையைக் கோட்டை விடலாமா?

அர்த்தமுள்ள வாழ்க்கை

நம்முடைய நாகரீகம் எப்படி பல பொருள்களை நமக்கு சொந்தமாக்கிக் கொள்வது என்பதைத்தான் சொல்லிக் கொடுக்கிறது. சொத்து சேர்க்கும் ஆசையைத் தவிர்த்து, நம்மிடம் இருக்கும் சொத்தை எப்படி உபயோகமாகச் செலவிடுவது என்பதைப் பற்றி சொல்லிக் கொடுத்தால் பல நன்மைகள் உண்டாகும். தன்னிடமிருப்பதை எப்படி நல்லமுறையில் செலவு செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளாதவ்னுக்கு சுதந்திரமும், அர்த்தமுள்ள வாழ்க்கையும் கிடைக்காது.

-கேப்ரியல் மார்ஸெல்

வாழ்க்கைக்கு சக்தி

வாழ்க்கையில் நல்ல ஆரோக்கியத்தைப் பெற விரும்புபவர்கள், எதற்கும் கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும். உயர்ந்தவைகளைப் பற்றியே நினைக்க வேண்டும். எப்போதும் புன்னகையுடன் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். உயர்ந்த இலட்சியங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இப்படி இருப்பதைக் கடினமான பயிற்சியின் மூலம் ஒரு பழக்கமாக மாற்றிக் கொண்டு விட்டால், வாழ்க்கை சுவையானதாக மாறிக் கொண்டு வரும். உடலையும் மனதையும் ஆத்மாவையும் கடினமான முயற்சியால் உயர்த்திக் கொண்டவனுக்குப் பலமும், ஊக்கமும் கிடைக்கும். உழைப்பு மனத்திலும் உடலிலும் குடிகொண்டிருக்கும் சோம்பேறித்தனத்தை அகற்றுகிறது. ஆத்மாவை வலுப்படுத்துகிறது. சோர்வைத் தரும் நிகழ்ச்சிகளை சமாளிக்கும் தன்மையை, சக்தியைத் தருகிறது.

-நார்மன் வின்சென்ட் பீல்

சுவையான வாழ்க்கை

அளவுக்கு மீறிப் பணம் சேர்க்க வேண்டும் என்கிற வெறியில் உங்களை நீங்கள் வாட்டிக் கொள்ளாதீர்கள். உண்மையான உழைப்பின் துணையுடன், நியாயமாகக் கிடைப்பதைக் கொண்டு அதை நன்கு அனுபவிக்கும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்பவர்களுடைய வாழ்க்கை சுவையுடையதாக இருக்கும்.

-ஆதி சங்கராச்சாரியார்

வாழ்க்கையைத் தள்ளிப் போட்டு

வாழ்க்கையை நன்கு அனுபவிக்காமல் அதைத் தள்ளிப்போட்டுக் கொண்டு வரும் மனித சுபாவம் மிகவும் வருந்தத்தக்கது. நம் கண்களுக்கு முன்பு, தொடும் தூரத்தில் மலர்ந்து மணம் வீசும் ரோஜா மலர்களை அனுபவிக்காமல், ஆகாயத்திலிருந்து ஒரு அழகான மலர்த் தோட்டம் குதிக்கப் போகிறது என்று அனைவரும் கனவு காண்பதிலேயே தங்களுடைய வாழ்க்கையை வீணடித்து வருகிறார்கள். குழந்தை, பெரிய பையனாக வளர்ந்தவுடன், வேலையில் சேர்ந்து மற்றவர்களால் மதிக்கப்படும் மனிதனாக மாறிய பின்புதான் தன்னால் இன்பமாக வாழமுடியும் என்று நினைக்க ஆரம்பிக்கிறான். வேலையில் சேர்ந்தபின்பு, திருமணம் செய்து கொண்டால்தான் இன்பம் கிடைக்கும் என்று நினைக்கிறான். திருமணம் செய்து கொண்டபின்பு, வேலையிலிருந்து ஓய்வு பெற்றால்தான் இன்பம் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். மனிதர்கள், இப்படித் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்து, இன்பத்தை முற்றிலுமாகக் கோட்டைவிட்டு விடுகிறார்கள்.

-ஸ்டீபன் லீ காக்

அவமான வாழ்க்கை

உங்களுக்கு நேரமில்லையா? - நாகரீக மனிதனுடைய பெரிய நோய் இது. உங்களுக்கு சிரிப்பதற்கும், பேசுவதற்கும் நேரமில்லையென்றால் நீங்கள் கட்டாயம் தவறாக வாழ்ந்து வருகிறீர்கள். அப்படிப்பட்ட அவமான வாழ்க்கையை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். இந்தமாதிரி வாழ்க்கை வாழ்வதிலிருந்து உங்களை நீங்கள் திருத்திக் கொள்ளாவிட்டால், வாழ்க்கையில் இன்பம் என்பதை சிறிதும் காணாமல் உங்களை அழித்துக் கொண்டு விடுவீர்கள்.

-அலெக்ஸாண்டர் ஸோல்ஜினிட்ஸின்

 தொகுப்பு: தாமரைச்செல்வி.

காதல் வந்துவிட்டால்...

 • நண்பனைக் கஷ்டகாலத்தில் தெரிந்து கொள்ளலாம்; வீரனைப் போர்க்காலத்தில் தெரிந்து கொள்ளலாம்;  நேர்மையானவனைக் கடன் கொடுத்துத் தெரிந்து கொள்ளலாம்; துணைவியைச் செல்வம் போனபின்பு தெரிந்து கொள்ளலாம்; உறவினரைத் துன்ப காலத்தில் தெரிந்து கொள்ளலாம்.

-இந்தியா.

 • உன்னைப் புண்படுத்துவது எது என்று உனக்குத் தெரிந்தால், மற்றவர்களைப் புண்படுத்துவது எது என்பது உனக்குத் தெரியும்.

-ஆப்பிரிக்கா.

 • மணவாழ்க்கை என்பது முற்றுகையிடப்பட்ட ஒரு கோட்டை மாதிரி. வெளியே இருப்பவர்கள் உள்ளே செல்ல விரும்புகிறார்கள். உள்ளே இருப்பவர்கள் வெளியே செல்ல விரும்புகிறார்கள்.

-அரேபியா.

 • பயத்தைக் குறை-நம்பிக்கையைப் பெருக்கு! உணவைக்குறை-உழைப்பைப் பெருக்கு! குடியைக் குறை-மூச்சைப் பெருக்கு! பேச்சைக் குறை-செயலைப் பெருக்கு! வெறுப்பைக் குறை-அன்பைப் பெருக்கு! அனைத்து நன்மைகளும் உனக்கே.

-ஸ்வீடன்.

 • துறவிகள் மெலிந்தால் அழகு. நான்கு கால் விலங்கினங்கள் கொழுத்தால் அழகு. மனிதர்கள் படித்தால் அழகு. பெண்கள் மணந்தால் அழகு.

-மியான்மர்.

 • தெரிந்தவையெல்லாம் சொல்ல வெண்டுமென்பதில்லை! கேட்டதையெல்லாம் நம்ப வேண்டுமென்பதில்லை! முடிந்ததையெல்லாம் செய்ய வேண்டுமென்பதில்லை.

-போர்ச்சுக்கல்.

 • பூமியில் பயனற்ற காரியங்கள் நான்கு: பலனற்ற மண்ணில் பெய்த மழை; சூரிய வெளிச்சத்தில் வைத்த விளக்கு; குருடனை மணந்த அழகி; நன்றி கெட்டவனுக்குச் செய்த நற்காரியம்.

 -அரேபியா.

 •  மூன்று உயிரினங்கள் தங்களை அலங்கரித்துக் கொள்வதில் காலத்தைக் கழிப்பவை. அவை; பூனைகள், ஈக்கள்; காதலிகள்.

- பிரான்ஸ்.

 •  தூக்கம் வந்துவிட்டால் தலையணை தேவையில்லை, காதல் வந்துவிட்டால் அழகே தேவையில்லை.

- ஆப்கானிஸ்தான்.

 • வாழ்க்கை என்பது வாழும் கலையில் ஒரு தேர்வு. ஆனால், அதன் முடிவுகளை அறிவதற்குள் நம் வாழ்க்கை முடிந்து விடுகிறது.

- நைஜீரியா.

 தொகுப்பு: தாமரைச்செல்வி.

யார் பொய் சொல்கிறார்கள்?

 • ஒன்று நிகழப் போகும் முன்பே அதைப் பற்றிக் கவலை கொள்வது இரவு பெய்யப் போகும் மழைக்குப் பகலில் குடை விரிப்பது போன்றது.

-யாலப் தாம்சன்.

 • தற்பெருமை எங்கு முடிகிறதோ, அங்கு கண்ணியம் தொடங்குகிறது.

-பங்.

 • முயற்சி என்பது இதயத்துள் உண்டாகும் உணர்ச்சி மட்டுமன்று, ஆற்றலைக் கிளப்பும் ஒரு தூண்டுகோள் அது.

-தாகூர்.

 • கோழைகளைத் தவிர வேறு யாரும் பொய் சொல்வதில்லை.

-மர்பி.

 • அதிகமாகப் பேசுபவர்கள் குறைவாகச் சிந்திக்கிறார்கள்.

-டிரைடன்.

 • வேலை மனிதனைக் கொல்வதில்லை. கவலைதான் கொல்லும்

-பீசீசர்.

 • நீயும் உடன்படாவிடில், நீ தாழ்ந்தவன் என்ற உணர்வை உன் மேல், எவராலும் எங்கும் சுமத்த முடியாது.

 -எலினார் ரூஸ்வெல்ட்.

 •  நீங்கள் விரும்பும் உரிமைகளை எல்லாம் பிறருக்கும் அளித்து விடுங்கள்.

- இங்கர்சால்.

 •  மரியாதையாகப் பேசுவதும், நடப்பதுவும் செலவில்லாத செல்வங்கள்.

- செர்வாண்டில்.

 • ஓடுவதில் பயனில்லை, நேரத்தில் புறப்படுவதே தேவை.

- ஜீந்தொஃபோன்தேன்.

 தொகுப்பு: தாமரைச்செல்வி.

யானையிடம் போரிட்டுத் தோற்பது நல்லது.

மிகவும்...

 • மிகவும் கசப்பானது தனிமையே!

 • மிகவும் மரியாதைக்குரியவர் அன்னையே!

 • மிகவும் துயரமானது மரணமே!

 • மிகவும் அழகானது அன்புணர்வே!

 • மிகவும் கொடுமையானது பழி வாங்குதலே!

 • மிகவும் கவலை தருவது செய்நன்றி மறப்பதே!

 • மிகவும் மகிழ்ச்சியானது சிறந்த நட்பே!

 • மிகவும் வெறுமையானது இல்லையென்பதே!

 • மிகவும் ரம்மியமானது நம்பிக்கையே!

-டாக்டர் விஸ்பிரட் பங்க்

எது நல்லது?

 • தன் அருமையை உணராதவர் பொருளை இரந்து பெறுவதிலும் பிச்சை எடுப்பது நல்லது.

 • அன்புடன் உபசரியாதவர் வீட்டில் விருந்துண்பதை விட பட்டினியாயிருப்பது நல்லது.

 • எளிய ஒரு முயலைக் கொல்வதை விட யானையோடு போரிட்டுத் தோற்பது நல்லது.

 • இனிய பண்புகளற்ற பெண்களிடம் கூடுவதை விட துறவு கொள்வது நல்லது.

 • பகைவரோடு நட்பாயிருப்பதை விட பாம்பிடம் பழகுவது நல்லது.

 • அருளாளர்க்கு ஆதரவு செய்யாத நிலையில் இறப்பது நல்லது.

 • வஞ்சகர்களுடன் சேர்ந்து வாழ்வதை விட தனித்து வாழ்வது நல்லது.

-குமரேச சதகம்.

தேவையான மூன்றுகள்

 • இருக்க வேண்டிய மூன்று - தூய்மை, நீதி, நேர்மை.

 • ஆள வேண்டிய மூன்று - கோபம், நாக்கு, நடத்தை.

 • பெற வேண்டிய மூன்று - தைரியம், அன்பு, மென்மை.

 • கொடுக்க வேண்டிய மூன்று - இரப்போர்க்கு ஈதல், துன்புறுவோர்க்கு ஆறுதல், தகுதியானவர்க்குப் பாராட்டு.

 • அடைய வேண்டிய மூன்று - ஆன்ம சுத்தம், முனைவு, உள்ள மகிழ்வு.

 • தவிர்க்க வேண்டிய மூன்று - இன்னா செய்தல், முரட்டுத்தனம், நன்றியில்லாமை.

 • பரிந்துரைக்க வேண்டிய மூன்று - சிக்கனம், தொழிலூக்கம், நாணயம்.

 • நேசிக்க வேண்டிய மூன்று - அறிவு, கற்பு, மாசின்மை.

-மகாவீரர்

மரிக்கும் முன்னால்...

 • பேசும் முன்னால் நீ கவனமாய்க் கேள்.

 • எழுதும் முன்னால் நீ யோசிக்கத் தவறாதே.

 • செலவழிக்கும் முன்னால் நீ சம்பாதிக்கப் பார்.

 • பிறரை விமர்சிக்கும் முன்னால் உன்னை எண்ணிப் பார்.

 • பிரார்த்தனைக்கு முன்னால் மாற்றாரை மன்னித்து விடு.

 • ஓய்வு பெறும் முன்னால் சேமித்து வை.

 • மரிக்கும் முன்னால் கொடுத்து விடு.

-ராபர்ட் கால்டுவெல

 தொகுப்பு: தாமரைச்செல்வி.

குரங்கை நம்பி பணத்தைக் கொடுக்கலாமா?

 • ஏழ்மையிலிருந்து செழுமைக்குப் போகும் பிரயாணம் மிகக் கடினம். ஆனால் திரும்பி வருவது எளிது.

-ஜப்பான்.

 • பூமியில் குடிசை கட்டுவதற்கு சக்தியற்ற சிலர், ஆகாயத்தில் அநேக அரண்மனைகளைக் கட்டிக் கொண்டிருக்கின்றனர்.

-வேல்ஸ்.

 • தொடர்ந்து மூன்று நாள் பசித்துக் கிடந்தால், ஒரு மனிதன் திருடவும் துணிவான்.

-கொரியா.

 • உங்கள் சந்ததியினருக்குச் சரியான இரண்டு வழிகளைச் சொல்லிக் கொடுங்கள். அவை இலக்கியமும் விவசாயமும்.

-சீனா. 

 •  தண்டிக்கப்படுகிறவன் திருடனல்ல. திருடிவிட்டு அகப்பட்டுக் கொள்கிறானே அவன்தான் திருடன்.

-செக்கோஸ்லோவேகியா.

 • பொய்யினால் வரும் இன்பத்தை விட உண்மையால் வரும் துன்பம் எத்தனையோ வகைகளில் சிறந்தது.

-டென்மார்க்.

 • வாழ்க்கை என்பது வாழும் கலையில் ஒரு பரீட்சை. அதன் முடிவை அறிவதற்குள் நம் வாழ்க்கை முடிந்து விடுகிறது.

  -துருக்கி.

 •  உழைப்புதான் ஒரு மனிதனை மற்றொரு மனிதனை விட முந்தச் செய்கிறது.

- நைஜீரியா.

 •  நூறு ஆண்டு வாழ்பவனைப் போல வேலை செய். நாளையே இறந்து விடுபவனைப் போல் சிந்தனை செய்.

- பல்கேரியா.

 • பிறர் அறியாததை வைத்து அவர்களை மதித்தல் ஆகாது. அறிந்துள்ளதை எவ்விதம் அறிந்திருக்கின்றனர் என்பதை வைத்தே அவர்களை மதிக்க வேண்டும்.

- பிரான்ஸ்.

 • இனிப்புப் பண்டங்கள் உடலைக் கெடுக்கின்றன. புகழ் சிறந்தவர்களையும் கெடுத்து விடுகிறது.

- பின்லாந்து.

 • மரம் ஏறத் தெரியாதவன் குரங்கை நம்பி பணத்தைக் கொடுக்கக் கூடாது.

- பெல்ஜியம்.

 • இளமை முதுமையை நோக்கி விரைகிறது. இன்பம் துன்பத்தை நோக்கி நகருகிறது.

- ருமேனியா.

 தொகுப்பு: தாமரைச்செல்வி.

 
Comments on this page:
Comment posted by Jeaowen, 01/26/2019 at 6:57am (UTC):
Viagra Super Active Plus Review <a href=http://uscagsa.com>buy cialis online</a> Achat De Lioresal

Comment posted by Jeaowen, 01/13/2019 at 4:28pm (UTC):
Allergic Reactions To Amoxicillin Free Shipping Fluoxetine Fysionorm Cash On Delivery <a href=http://sildenaf50.com>viagra</a> Purchase Fedex Shipping Levaquin Low Price No Physician Approval Where Can I Buy Alli Kamagra Jelly Buy Online Free Shipping Clobetasol For Sale Discount Shop <a href=http://buyonlinecial.com>buy generic cialis online</a> Prix Kamagra Au Maroc Viagra Online Canadian Pharmacy Www Buycialisonlinecheap Viagra On Line Con Mastercard Where To Purchase Doryx In Internet Worldwide Riverside Avigra Sales Aus <a href=http://buylevi.com>cheap levitra for sale</a> Baclofene Nantes Viagra Compra Awc Canadian Phar Cialis Come Usarlo <a href=http://genericcial.com>generic cialis</a> Cialis Dose Quotidienne Order Now Bentyl With Free Shipping Drugs Vente Viagra En Ligne

Comment posted by Jeaowen, 12/26/2018 at 12:57am (UTC):
Cialis Viagra Differenze Viagra Store Usa <a href=http://crdrugs.com>canadian pharmacy cialis 20mg</a> Cephalexin Prgnancy Vendo Viagra Contrareembolso Buy Paroxetine 500 Keflex Buy Viagra Taiwan 49 <a href=http://boijoy.com>Achat Levitra</a> 5mlAdd comment to this page:
Your Name:
Your website URL:
Your message:

 
  Today, there have been 42 visitors (331 hits) on this page!  
 
=> Do you also want a homepage for free? Then click here! <=
PAKEE Creation. Address:- No:- 61 Sivan Kovil Road Thonikkal, Vavuniya, Sri Lanka. Telephone No :- 0094775156177 Mail ID :- Pakeer_87@yahoo.com my other web site www.PAKEECreation.BlogsPot.com